திங்கள், அக்டோபர் 17, 2011

பசுவின் இறைச்சியில் புழு இருப்பதில்லையா ?



وَلَا تُجَادِلُوا أَهْلَ الْكِتَابِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ وَقُولُوا آمَنَّا بِالَّذِي أُنزِلَ إِلَيْنَا وَأُنزِلَ إِلَيْكُمْ وَإِلَهُنَا وَإِلَهُكُمْ وَاحِدٌ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ 
வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்;கள்! ''எங்களுக்கு அருளப்பட்டதையும்> உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே ! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் என்று கூறுங்கள். திருக்குர்ஆன். 29:46



 பசுவின் இறைச்சியில் புழு இருப்பதில்லையா ?

இதற்கு முன் ''கோக்கும் பன்றியின் இறைச்சியும்'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை வாசித்த ஹிந்து சகோதரர்கள் பலர் மாட்டிறைச்சியை சுற்றியேப் பலவாறான கேள்விகளை எழுப்பி இருந்தனர். அதில் ஒருவர் பசுவுடைய இறைச்சியில் மாத்திரம் புழுக்கள் இருப்பதில்லையா ? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். ( பசுவின் இறைச்சியை உண்ணுவது தவறு என்ற ரீதியில் அவருடைய கேள்வி அமைந்திருந்தது ).

இல்லை என்று திட்டவட்டமக கூறமுடியும் என்பதுடன் அது இறைவனால் மனித சமுதாயத்திற்கு உண்பதற்கு அனுமதிக்கப்பட்டது என்பதால் அனுமதிக்கப்பட்ட கால்நடைகள அசுத்தத்தை உண்டாலும் கூட அதனுடைய இறைச்சியில் புழுக்கள் உற்பத்தியாவதில்லை இது இறைவனுடைய ஏற்பாடு.

உலகில் தோற்றுவிக்கப்பட்ட உயிரிணங்களில் இறைவன் தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்காக அதில் அதிசயிக்கத்தக்க பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றான்.

அதில் ஒன்று தான் இறைவனால் மனிதன் உண்பதற்கு தடுக்கப்பட்ட பன்றி எத்தனை உயர்தர தீவணங்களை உட்கொண்டாலும் அதனுடைய இறைச்சியில் கொடிய நோயைப் பரப்பும் புழுக்கள் உற்பத்தியாகின்றது.

அதேப்போன்று இறைவனால் மனிதன் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட கால்நடைகளில் சில தாவரங்களில் மேயும்பொழுது சில நேரங்களில் புழுப் பூச்சிகளை விழுங்கக் கூடியவைகளாக இருந்தபோதிலும் அதனுடைய இறைச்சியில் புழுக்கள் உற்பத்தியாவதில்லை. இறைவன் இருக்கிறான் என்பதற்கு இதுவும் ஒருப் பெரிய சான்றாகும்.

பசுவதையின் பிண்ணனி
'' பசுவதை ''  '' பசுவதை '' என்று இன்று ஓலமிடும் ஆரியர்களின் மூதாதையர்களுடைய பண்டைய காலத்து பிரதான உணவே பசுவின் இறைச்சியாகும். என்பது அதிகமானோருக்குத் தெரியாது. அதேப்போன்று அவர்களுடைய வேதக்கிரந்தங்களில் எங்குமே பசுமாட்டை வணங்க வேண்டுமென்றோ அல்லது அதை அறுத்து உண்ணக்கூடாது என்றோ திட்டவட்டமாக சொல்லப்படவில்லை.

ஆரியர்களுக்கும், குப்தர்களுக்கும் இடையில் நிகழ்ந்து வந்த ஏற்றத் தாழ்வுகளின் காரணமாக ஆரியர்கள் விரும்பி உண்டு வந்த பசுவின் இறைச்சியை தடை செய்வதற்காக குப்த மன்னர்களால் இயற்றப்பட்ட சட்டம் தான் பசுவதை தடுப்புச் சட்டம்.

கி.பி. 200ல் தீண்டாமை இல்லை. கி.பி. 600ல் தீண்டாமை பிறந்தது என்று முடிவு செய்ய முடியும். புத்தமதத்தினரும் பிராமணர்களும் தங்களுக்குள் உயர்ந்தது யார் என்ற போட்டி போட்டதால் தீண்டாமை ஏற்பட்டது. குப்தமன்னர்களால் தான் பசுவதை ஒரு குற்றமாக ஆக்கப்பட்டது. ஆதார நூல்: தீண்டப்படாதவர் -டாக்டர் அம்பேத்கர் பக்கம் 168

பிராமணன் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தியது தங்களுக்கு மேல் அந்தசுத்தைப் பெற்றிருந்த புத்தபிட்சுக்களிடமிருந்த உயர் ஸ்தானத்தைப்பறிக்கவே. இழந்த இடத்தைப்பிடிக்க பிராமணர் மாமிசம் உண்பதை விடுவதோடு, மரக்கறி உண்பவர்களாகவும் மாறினார்கள். ஆனால் அவர்களுடைய மனுசட்டம் மாட்டிறைச்சி உண்பதை தடுக்கவில்லை. ஆதாரநூல்:  தீண்டப்படாதவர்- டாக்டர் அம்பேத்கர் .பக்கம் 128

அக்னிக்காக குதிரைகள், காளைகள். எருதுகள், மலட்டுப்பசுக்கள், செம்மறியாடுகள் பலியிடப்பட்டன என்று ரிக்வேதம் கூறுகிறது  (எக்சு 91.14) ரிக்வேதத்தின்படி பசுக்கள் வாளாலும் கோடரியாலும் கொல்லப்பட்டன.(72.6) ஆதார நூல்: தீண்டப்படாதவர்-டாக்டர் அம்பேத்கர். பக்கம் 94

விஷ்ணுவிற்கு குள்ளமான எருதும், வளமான கொம்புள்ள காளையை விரித்ராவை அழித்த இந்திரனுக்கும், கறுப்பு பசுவை புஷனுக்கும், செம்பசுவை ருத்ரனுக்கும் பலியிடவேண்டும். (தைத்திரிய பிராமணா) ஆதார நூல்:  தீண்டப்படாதவர்- டாக்டர் அம்பேத்கர் .பக்கம் 95

1870ல் பசுவந்தணை என்கிற திருநெல்வேலி மாவட்ட கிராமத்தில் ரெட்டியார் ஒருவருக்கு குழந்தைப்பேறு இல்லாது போகவே பசுவை அறுத்து பிராமணர்களை வரவழைத்து விருந்துக்கொடுத்தார் அதில் பசுவின் தொப்புள் மாமிசத்தை பிராமணர் உட்பட மற்றவர்களும் உண்டது தெளிவாகப் பதிவு ஆகி இருக்கிறது. அந்த பிராமணர்களின் வழித் தோன்றல்களை நேரில் சந்தித்த ஒருவரும் இதை உறுதிப்படுத்தினார். ஆதார நூல்: சோமயாகப் பெருங்காவியம்

மேலோங்கத் தொடங்கியதும் முஸ்லிம்களுடைய வேதம் மாட்டிறைச்சியை உண்பதற்கு அனுமதி அளித்திருப்பதாலும், அதை முஸ்லிம்கள் விரும்பி உண்ணுவதாலும் இஸ்லாமிய மார்க்கம் இந்தியாவில் அபரிமிதமாக வளர்ந்து வருவதாலும் ஒரு உள்நோக்கத்துடன் ஆரியர்கள் பசுமாட்டுக்கு கோமாதா என்ற பெயர் சூட்டி கடவுள் தன்மையை ஏற்படுத்தினார்கள்

பாருங்கள் மன்னின் மைந்தர்களே! நாம் கடவுளாக வணங்குவதை முஸ்லிம்கள் அறுத்து உண்ணுகின்றனர் என்ற துர்பிரச்சாரத்தை செய்து இந்தியாவின் பூர்வீக குடிமக்களை தங்களுடைய சகோதரர்களுக் (முஸ்லிம்களுக்கு) கெதிராகத் தூண்டி விட்டனர்.

தங்களுடைய இஸ்டத்திற்கு சட்டத்தை வளைத்துக் கொள்வதற்காகத் தான் எங்களைத் தவிர யாரும் Nவுதம் ஓதக் கூடாது என்ற தகவலையும் சேர்த்தேக்கூறினார்கள்.

பசுவின் இறைச்சியை உண்பதற்கும், அதை கடவுளின் பெயரால் அறுத்து பலியிடுவதற்கும் ஆரியர்களிடத்தில் உள்ள வேதக் கிரந்தங்களில் தெளிவாக அனுமதிக்க்ப் பட்டிருக்கின்றன என்பதுடன் அதை வேத விற்பண்ணர்கள் என்று சொல்லக்கூடிய பண்டைய காலத்து ஆரியர்கள் நடைமுறைப்படுத்தியுள்ள வரலாற்றை மேலேக் கண்டோம்.

பசுவை விரும்பியவாறு அறுத்து உணவாக உட்கொள்வதற்கும், கடவுளின் பெயரால் அறுத்துப் பலியிடுவதற்கும் ஆரியர்களிடத்தில் இருக்கும் வேதக்கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கும் பொழுது பசுமாடு எவ்வாறு கோமாதாவாகியது ? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஏகதெய்வக் கொள்கையை வலியுருத்தும் ஆரிய வேதக் கிரங்தங்கள்.
கண்ணில் கண்டதெல்லாம் கடவுளாக முடியாது என்றும், எந்த கண்ணும் காணாததுவே கடவுளாக இருக்க முடியும் என்றும், மொத்த பிரபஞ்சத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஆற்றல் ஒரே கடவுளுக்கு மட்டுமே சாத்தியமானது என்ற ஏகத்துவ தத்துவத்தையும் ஆரியர்களிடம் இருக்கும் வேதக் கிரந்தங்கள் பறைசாற்றுவதைக் காணலாம்.


கேனோ உபநிஷத் கூறுகிறது  
யச்ச க்ஷ ஷான பஸ்யதி யேன சஷ்யம் ஷி பஸ்யதி ததேவ ப்ரஹ்மத்வம் வித்தி நேதம் ய திதம் முபாஸதே யத் ஸ்ரோத்திரேன ந ஸ்ரூனோதி ஏன ஸ்ரோத்திரமிதம் ஸ்ருதம் த தேவ ப்ராஹ்மத்வம் வித்தி நேதம் யதித முபாஸதே கேனோ உபநிஷத் 1:6.7 


(எந்த ஒன்றைக் கண்கொண்டு காணமுடியாதோ> கண்ணிற்கு பார்வை வழங்கக்காரணம் எதுவொன்றோ அதுவே நீ பிரம்மம் என்று கொள். கண்கொண்டு காணும் எந்தவொன்றையும் மனிதர்கள் வணங்கினால்> அது பிரஹ்மமல்ல. ) 


பகவத் கீதை கூறுகிறது 
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யச்ச குருர்- கரீயான் நத்வத்ஸமோ ஸ்த யப்யதிக குதோஸன்ய லோகத்ர யேஸப்யப்ரதிம - ப்ரபாவ கீதை 11:43                                    


(ஒப்புயர்வில்லாத பெருமை வாய்ந்தவனே! நீ இந்த அசைவதும் அசையாததுமாகிய உலகிற்கு தகப்பனும் பூஜித்ததற்குரியவனும் பெரியவருக்குப் பெரியவனும் ஆகின்றாய்> மூவுலகிலும் உனக்குச் சமமானவர் இல்லை. இன்னும் மேலானவர் வேறொருவர் எங்ஙனம் ?


ரிக் வேதம் கூறுகிறது 
மானோ ஹிம்ஸூ ஜ்ஜ நிதாயஹ் ப்ருதிவ்யா யோ வா திவம் சத்ய தர்மா ஜஜான  யஷ்சா பஷ்சந்தரா ப்ருஹதீர் ஜஜான கஸ்மை தேவாய ஹவிஷா விதமே. ரிக்வேதம்10:121:9    


(எவர் பூமியை உண்டாக்கினாரோ> அதுபோல் உண்மையை நியாயமாக்கி வைத்துக் கொண்டிருக்கும் எவர் தெய்வாமிர்தத்தை உண்டாக்கினாரோ> எவர் நீரும் பெரிய பிரகாசத்தையும் உண்டாக்கினாரோ> அந்த படைப்பாளனே நம்மை பரிபாலிக்கின்றான். அப்படிப்பட்ட தான் தோன்றியான பரமாத்மாவை நாங்கள் பக்தியோடு வணங்குகின்றோம்.) 


அதர்வ வேதம் கூறுகிறது: 
ஏதம் தேவ மேக விருதம் வேத த்விதியோ ந த்ருதீயஷசதுர்தோ நா ப்ய சயதே ஏதம் தேவ மேகவ்ருதம் வேத பஞ்சமோ ந ஷஷடஹ் ஸப்தமோ நா ப்யூச்யதே ஏதம் தேவ மேகவ்ருதம் வேத ஷுமோ ந நவமோ தஷமோ நா ப்யூச்யதே ஏதம் தேவமேக வ்ருதம் வேத ஸர்வஸ்மை வி பஷயதி யச்ச ப்ராணதியச்சன ஏதம் தேவ மேக வ்ருதம் வேத தமிதம் நிஹதம் ஸஹஹ் ஸ ஏஷ ஏக ஏகவ்ருதேக ஏவ ஏதம் தேவ மேக வ்ருதம் வேத அதர்வ வேதம் த்ரியோ தஷகாண்டம் 4:4:14-19  


(எவனொருவன் எல்லாம் அறிந்தவனாகவுள்ளானோ> அவனே மேன்மை> மகிமை> ஆகாயம்> நீர்> பிரம்மச்சரிய பிரகாசம்> அன்னம் பஜனைகிரியை எல்லாம் ஏற்படுத்தியுள்ளான். அவனை ஒன்று என்றோ> இரண்டு என்றோ> மூன்று என்றோ> நான்கு என்றோ> ஐந்து என்றோ> ஆறு என்றோ> ஏழு என்றோ> எட்டு என்றோ> ஒன்பது என்றோ> பத்து என்றோ> கூறப்படுவதில்லை. அவன் நிலையான எல்லா வஸ்துக்களையும் தர்ஷிக்கின்றான்> அவன் அசாதாராணமானவனும் ஏகனுமாவான். இவையெல்லாம் அவனின் ஏற்பாடேயாகும்.) 
  
ஸ்வேதாஸதரோ உபநிஷத் கூறுகிறது:
தஸ்ய கார்யம் கரனம் ச வித்யதே தஸ்ய ஸமஸ்சா யதிகஸ் ச த்ருஸ்யதே பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஸ்ருயதே ஸ்வா பாவிக ஜ்ஞான பல க்ரியா ச ஸ்வேதாஸதரோ உபநிஷத் (3:1) 


அந்த பரமாத்மாவிற்கு ஜீவிகளைப் போல சரீரமும் புலனுணர்வுகளும் இல்லை. அவனை விட பெரியவனோ அல்லது சமமானவரோ எவரும் இல்லை. அவனுடைய ஆற்றல் பலவிதத்தில் செயல்படுகின்றது. அவனுடைய ஞானமும் ஆற்றலும் அவனுக்கேயுரிய இயல்பாகும்.)


சிந்தியுங்கள் சகோதரர்களே ! 
  • அவனை ஒன்று என்றோ> இரண்டு என்றோ> மூன்று என்றோ> நான்கு என்றோ> ஐந்து என்றோ> ஆறு என்றோ> ஏழு என்றோ> எட்டு என்றோ> ஒன்பது என்றோ> பத்து என்றோ> கூறப்படுவதில்லை. என்று அதர்வ வேதம் கூறுகிறது 
  • ஏகனாகிய பரமாத்மாவே! இந்த பிரபஞ்சத்தை படைத்துத் தன்னுடைய மேலான கட்டளைகளைக் கொண்டு ஆட்சி செய்யவும் செய்கின்றான். என்று ரிக் வேதம் கூறுகிறது:மூவுலகிலும் உனக்குச் சமமானவர் இல்லை. இன்னும் மேலானவர் வேறொருவர் இல்லை என்று பகவத் கீதை கூறுகிறதுகண்கொண்டு காணும் எந்தவொன்றையும் மனிதர்கள் வணங்கினால்> அது பிரஹ்மமல்ல. என்று கேனோ உபநிஷத் கூறுகிறது.

ஏகஇறைவன் ஒருவனே! என்று பழமை வாய்ந்த ஹிந்து வேதங்கள் அடித்து ஆணித்தரமாக முழங்குகின்ற பொழுது  பசுவதை தடுப்புச் சட்டம் எங்கிருந்து வந்தது ? பசுமாடு எங்ஙனம் கடவுளாக மாறியது

உங்களிடம் இருக்கும் வேதங்களும், எங்களிடம் இருக்கும் திருக்குர்ஆனும் ஏகஇறைவன் ஒருவனே! என்று முழங்குவதால் அந்த ஓரிறைவன் உங்களுக்கும் எங்களுக்கும் சில கால்நடைகளை உண்டு புசிப்பதற்காகவும், இன்னும் பிற உபயோகத்திற்காகவும் படைத்துள்ளதாக கூறுகிறான். நீங்கள் ஏறிச்செல்வதற்காக உங்களுக்கு கால்நடைகளை அல்லாஹ்வே உருவாக்கினான். அவற்றிலிருந்து உண்ணுகிறீர்கள். திருக்குர்ஆன்.40:79 

ஏகஇறைவனுடைய கூற்றுக்கொப்பவே முஸ்லிம் சமுதாயமாகிய நாங்கள் எங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறோம். உலக ஆதாயத்திற்காக இறைவேதத்திற்கு மாறாக ஒரு முடிவை மேற்கொள்ள மாட்டோம் , சில நேரங்களில் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு சில தவறுகளை செய்து விட்டால் அதைக் குற்றம் படிக்காNது இறைவா ! என்று இறைவனிடம் அழுது பாவமன்னிப்புக் கோருவோம் ஆனால் மனோ இச்சைக்குட்பட்டு செய்த தவறை குர்ஆன் கூறியது என்று  பொய் சொல்ல மாட்டோம்.

 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... 
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்